முகப்புகோலிவுட்

ஒரிஜினலை விட ரீமேக் விறுவிறுப்பாக செல்ல ‘யு டர்ன்’ இயக்குநர் செய்த ட்ரீட்மென்ட்

  | September 06, 2018 17:28 IST
U Turn Movie Remake

துனுக்குகள்

 • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்கியுள்ளாராம்
 • இதில் சமந்தா, ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்
 • படத்தை தமிழ், தெலுங்கில் செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்ட
கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘யு டர்ன்’. ‘லூசியா’ புகழ் பவன் குமார் இயக்கியிருந்த இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வெர்ஷன்களில் ‘குயின் ஆஃப் சவுத் இந்தியா’ நடிகை சமந்தா நடித்துள்ளார்.

மேலும், ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி – த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படத்தை ‘ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் – VY கம்பைன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், ப்ரோமோ பாடல் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன்குமாரே இதனை இயக்கியிருந்தாலும், திரைக்கதையை இன்னும் விறுவிறுப்பாக்க இந்த படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகளில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com