முகப்புகோலிவுட்

செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கும் சமந்தாவின் 'யூ டேர்ன்'

  | July 23, 2018 11:10 IST
Samantha U Turn Remake

துனுக்குகள்

  • ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன் குமாரே இதனை இயக்குகிறாராம்
  • த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார்
  • இதில் ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்
கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் 'யூ டர்ன்'. 'லூசியா' புகழ் பவன் குமார் இயக்கியிருந்த இப்படம் அங்கு சூப்பர் ஹிட்டானது. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் ஷரதா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் வெர்ஷன்களில் 'குயின் ஆஃப் சவுத் இந்தியா' நடிகை சமந்தா நடிக்கிறார்.

மேலும், ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா, நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒரிஜினல் வெர்ஷனை இயக்கிய பவன்குமாரே இதனை இயக்குகிறாராம். மிஸ்ட்ரி - த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படத்தை 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் - VY கம்பைன்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சமந்தா ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தை செப்டம்பர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் டிரெய்லர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com