முகப்புகோலிவுட்

தெலுங்கு ஹீரோவிற்கு வில்லனாக நடிக்கும் சமுத்திரகனி!

  | August 13, 2019 18:58 IST
Samuthirakani

துனுக்குகள்

  • சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிக்கிறார் இவர்
  • தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கிறார்
  • இவர் நடிப்பில் அடுத்த சாட்டை விரைவில் வெளியாக இருக்கிறது
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரில் ஒருவராக இருக்கிறார்  அல்லு அர்ஜுன். சமீபத்தில் அவர் நடித்த படங்கள்  சரியான வரவேற்பு கிடைக்காததால் கதைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்து நடித்து வருகிறார். அதன்படி, இப்போது திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில்  நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஜெயராம், தபு, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 
இந்நிலையில், படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி நடித்துள்ள அடுத்த சாட்டை திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தவிற “நாடோடிகள் 2” படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்