முகப்புகோலிவுட்

ஆன்மீக நாவலை படமாக்கும் சமுத்திரகனி?

  | August 06, 2019 18:51 IST
Samuthirakani

துனுக்குகள்

  • இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய நாவல் சிவம்
  • இந்த படத்தில் நடிக்க விஷால் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்
  • சமுத்திரகனி இயக்கத்தில் நாடோடிகள் 2 வெளியாக இருக்கிறது
நடிகரும் இயக்கநருமான சமுத்திரகனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2” திரைப்படம் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. இந்த படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி, அதுல்யா இன்னும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான கொளஞ்சி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரகனி,
 
தற்போது தனது இயக்கத்தில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன் படி இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை படித்த சமுத்திரக்கனி இந்த கதைக்கு விஷால் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்து அவரிடம் கதையைக் கூறியுள்ளதாக தெரிகிறது. விஷாலுக்கும் இந்தக் கதை பிடித்துவிட, உடனே அந்தக் கதையைத் திரைப்படமாக்க உரிமை பெற்றுள்ளார். இந்த திரைப்படம் ஓர் ஆன்மிக ஆக்‌‌ஷன் திரைப்படமாக உருவாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் பங்குபெற உள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்