முகப்புகோலிவுட்

சம்பளம் வாங்காமல் நடித்த சமுத்திரகனியும் தம்பி ராமய்யாவும்! உண்மையை உடைத்த சமுத்திரகனி!

  | August 08, 2019 16:13 IST
Samuthirakani

துனுக்குகள்

 • அடுத்த சாட்டை படத்தை அன்பழகன் இயக்குகிறார்
 • பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபுதிலக் தயாரிக்கிறார்
 • நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை சமுத்திரகனி வருத்தம்
இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்ற படம் சாட்டை. இந்த படத்தில் பள்ளி ஆசிரியராக சமுத்திரகனியின் சிரப்பான நடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி மகன் பிரபுதிலக் தயாரிக்க முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, தம்பிராமையா ஆகியோருடன் அதுல்யா ரவி, சசிகுமார், ஜூனியர் பாலையா உள்பட பலர் நடித்துள்ளனர் முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்த நிலையில், அடுத்த சாட்டை இசை வெளியீட்டு விழாவில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய சமுத்திரகனி,
‘சாட்டை படத்தில் நன்றாக நடித்தோம். படம் ஹிட். ஆனால் படத்தில் நடித்த நானும், தம்பி ராமையாவும் சம்பளம் வாங்கவில்லை. அந்த படம் மூலம் இன்று யார் யாரோ சம்பாதிக்கிறார்கள். அதை வாங்கிய டிவி சேனல் வாரம்தோறும் ஒளிபரப்பி சம்பாதிக்கிறது.
 
சாட்டை படத்தில் நடித்த போதே பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தன. அந்த படத்தில் காட்டியது அப்படியே ஆசிரியர் பகவான் வி‌ஷயத்தில் நடந்தது. அதை டிவியில் பார்த்ததும் அடித்து பிடித்து அவர் எண்ணை வாங்கி பேசினேன். அவருடனான நட்பு இன்றும் தொடர்கிறது. அவருடைய அனுபவங்கள் பல வி‌ஷயங்களை எனக்கு கொடுத்தது.
 
அவர் எழுதிய புத்தகத்தில் பல கேள்விகள் உள்ளன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு படமாக எடுக்கலாம். அடுத்த சாட்டை படம் அதில் ஒன்றுதான். இந்த படம் வெளியானால் எந்த ஆசிரியரும் தன் மாணவனை வகுப்பை விட்டு வெளியேபோ என்று சொல்லமாட்டார்' இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com