முகப்புகோலிவுட்

நடிகை சனா கானை ஏமாற்றிய காதலன்.., அப்புறம் என்ன Breakup தான்..!

  | February 13, 2020 16:42 IST
Sana Khan

தனது காதலருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் பெயரையும் விரைவில் வெளியிடுவதாக நடிகை சனா கான் கூறியுள்ளார்.

நடிகை சனா கான் தனது காதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவரை விட்டு பிரிந்து தற்போது மனவருத்தத்தில் உள்ளார்.

எஸ்.டி.ஆரின் ‘சிலம்பாட்டம்' திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனா கான். அதையடுத்து தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ளார். அவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பிரபலமானார்.

சமீபகாலமாக ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த அவர், விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அயோக்யா' திரைப்படத்தில் ‘வேற லெவல்' எனும் குத்துப் பாடலுக்கு ஆடியிருந்தார்.

அவர், மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.

மெல்வின் லூயிஸ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும், பலரும் அதைப் பற்றி கூறிய போது நம்பாமல் இருந்ததாகவும் கூறிய அவர் “ சந்தேகத்தில், ஒரு முறை அவரது செல்போனை வாங்கிய போது, வெடுக்கென திரும்பப் பிடுங்கி போனில் உள்ள மெஸ்ஸேஜ்களை எல்லாம் அழித்தார்” என்று கூறியுள்ளார்.

This is my first n it has taken a lot of courage from me to come out n speak the truth. Coz there were so many people who believed in this relation n showed so much love n respect but unfortunately I didn't get it from where I should have gotten. This man is dirt n he is disgusting unfortunately it took me a year to find out coz I believed in him blindly. I have taken a stand for myself coz if I won't no one will ???? He is a compulsive cheater n a compulsive liar n this is his regular thing to do with everyone for his fame n popularity. This is the original content with no fabrication but be ready for the covers on this ???????? Ps: cheated on me with multiple girls since may/June which I lately discovered but there is one girl tht shocked me the most n I knw her #shameonyou miss **** I will def tell the world ur name so atleast others knw u before they collab with you ???? Upbringing matters a lot ???????? He wanted to marry me and have babies what would he teach my son n daughter??? #toxicrelationship #cheappeople

A post shared by Sana Khaan (@sanakhaan21) on

கடந்த ஒரு வருடமாக நம்பி ஏமாற்றமடைந்துள்ள சனா கான் தற்போது மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். மேலும், தனது காதலருடன் தொடர்பில் இருந்த பெண்ணின் பெயரையும் விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்