முகப்புகோலிவுட்

போதைப் பொருள் வழக்கில் நடிகை சஞ்சனா கல்ராணி கைது.!

  | September 09, 2020 12:33 IST
Nikki Galrani

கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

சாண்டல்வுட் திரைத்துறையில் 15 முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும், பலர் போதைப்பொருள் விற்கும் மாஃபியா கும்பலுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லிங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் சமீபத்தில் புகார் அளித்தார்ர.

இந்திரஜித் லிங்கேஷடிடம் இரண்டு நாட்கள் சிஐடி விசாரணையைத் தொடர்ந்து, கன்னட நடிகை ராகினி திவேதியின் நண்பரும் அரசு ஊழியருமான ரவிசங்கர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், இருவருமே ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, ராகினி திவேதி கடந்த 4ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரில் நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு இன்று சோதனை நடத்தியது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கன்னட திரையுலகில் பல நடிகைகள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை ராகினி உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஞ்சனா கல்ராணி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘ஒரு காதல் செய்வீர்' எனும் திரைப்படத்தில் அறிமுகமான இவர், மணி ராமியக்கத்தில் KPY ராமர் நடிக்கும் ‘போடா முண்டம்'  எனும் புதிய காமெடி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி பிரபல தமிழ் திரைப்பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர்த்து பார்ட்டி ஒருங்கிணைப்பாளர் விரேன் கன்னா, தொழிலதிபர் பிரசாந்த் ரங்கா, வைபவ் ஜெயின், ஆதித்யா அல்வா, ஆப்பிரிக்க போதைப் பொருள் சப்ளையர் லூம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ராஜு, அஸ்வின், அபிஸ்வாமி, ராகுல் மற்றும் வினய் ஆகியோர் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com