முகப்புகோலிவுட்

கே.ஜி.எஃப்-2 : சஞ்சய் தத்துக்கு மீதம் உள்ள முக்கிய பணி.!!

  | August 14, 2020 22:29 IST
Sanjay Dutt

படப்பிடிப்பு பணிகளை முடிக்க, இன்னும் 15 நாட்களுக்கு சூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வார தொடக்கத்தில், சஞ்சய் தத் தனது சமூக ஊடக பக்கத்தில் தனது உடல்நல சிகிச்சைக்காக வேலையில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த குறிப்பை வெளியிட்டார். அவர் விரைவாக குணமடைய அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து சமூக ஊடகங்களில் பிரார்த்தனைகளும், திரைத்துறைச் சகோதரத்துவங்களிடமிருந்து வாழ்த்துக்களும் அதிகரித்துவருகிறது.

சமீபத்தில், அவரது பிறந்த நாளில், கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2 படத்தில் ‘ஆதீரா'வாக அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2வில் சஞ்சய் தத்தை முக்கிய வில்லனாகப் பார்க்கலாம்.

தற்போதைய தகவல்களின்படி, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணியில் இருக்கும் இப்படத்தில் சஞ்சய் தத் நடிக்கும் பகுதிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றும் டப்பிங் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்ததாக மிக பிரம்மாண்டமாக தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவுள்ள படம் தான் ‘கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2'. பிரசாந்த் நீல் எழுதி இயக்கும் இப்படத்தில் யாஷுடன் ஶ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கௌடா ஒளிப்பதிவு பணியை கவனித்துக்கொள்கிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமீபத்தில் இப்படத்தின் வெளியீட்டை 2021 பொங்கலுக்கு தள்ள தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார் என்று தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படப்பிடிப்பு பணிகளை முடிக்க, இன்னும் 15 நாட்களுக்கு சூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com