முகப்புகோலிவுட்

சந்தானத்தின் அடுத்த லெவல் கலாய்..! டிரெண்டிங்கில் 'டகால்டி' டீசர்..!

  | December 02, 2019 11:32 IST
Santhanam

துனுக்குகள்

 • சந்தானத்தின் டகால்டி திரைப்படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் ரித்திகா சென் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 • இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'டகால்டி' திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் டகால்டி. ஹேண்ட் மேட் பிலிம்ஸ் பேனரில், எஸ்‌.பி. சௌத்ரியின் 18 ரீல்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடிக்கிறார். சந்தானத்துடன் சேர்ந்து மேலும் கலாய்க்க இப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இப்படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, டி. எஸ். சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும், இப்படத்துக்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ட்விட்டரில் வெளியிட்ட சில நிமிடங்களில் #DagaaltyTeaser என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. சந்தானத்திற்கே உரிய அந்த நக்கல் நிறைந்த வசனங்களும் அவரின் நகைச்சுவை நயமும் நிறைந்த இந்த டீசர் எல்லோரிடமும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com