முகப்புகோலிவுட்

கண்ணன் படத்திற்காக சிலம்பம் பயிலும் சந்தானம்!

  | September 03, 2019 17:31 IST
Santhanam

துனுக்குகள்

 • இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிப்பு
 • இப்படத்திற்காக நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது
 • அதர்வா நடிக்கும் படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளார் கண்ணன்
பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் சந்தானம் நடிக்கிறார் இதற்காக அவர் சிலம் பயிறிச் பெற்று வருகிறார்.
 
அதர்வா நடிப்பில் பூமராங் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பூமராங் படத்தை அடுத்து சந்தானத்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருந்தார் கண்ணன். ஆனால் சந்தானம் வேறு படங்களில் பிஸியாக இரந்ததால் மீண்டும் அதர்வாவுடன் வேறு படப்பணிகளில் இறங்கினார். இந்நிலையில் சந்தானம் நடிக்கும் படத்தின் பணிகளையும் அவர் தொடங்கியுள்ளார்.
 
கண்ணன். இதனை தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் சுமார் 45 நாட்கள் முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இந்தப் படத்துக்காகச் சிலம்பம் கற்று வருகிறார் சந்தானம். அவருடன் நடிக்கவிருக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு தற்போத நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 1-ம் தேதி படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com