முகப்புகோலிவுட்

காலம் கடந்து பயணிக்கும் சாண்டா - வெளியாகி, வைரலாகும் டிக்கிலோனா ட்ரைலர்..!

  | August 22, 2020 07:48 IST
Dikkiloona Trailer

துனுக்குகள்

  • டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே நம்மை அசரடிக்கிறது
  • தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த
  • காலம் கடந்து பயணம் செய்து அசத்தும் சந்தானம் என்று ட்ரைலர் படத்தின் மீதான
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே நம்மை அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ரசிகர்களை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம், காமெடி என்று எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறார்கள்.

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குகளும் மூன்றாக பாகங்களால் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நேற்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. சயின்டிஸ்ட்டாக களமிறங்கியுள்ள யோகி பாபு, காலம் கடந்து பயணம் செய்து அசத்தும் சந்தானம் என்று ட்ரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com