முகப்புகோலிவுட்

அன்று ரஜினியைக் கிண்டலடித்த நபர், இன்று கைது..!

  | February 22, 2020 12:09 IST
Rajini

தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளத்தில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹாஷ்டேகில் ட்ரெண்டாகிவருகிறது.

நடிகர் ரஜினியைப் பார்த்து ‘நீங்கள் யார்' எனக் கேட்டுக் கிண்டல் செய்த நபர், தற்போது பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுக் காயமுற்றவர்களை நேரில் சென்று சந்தித்தார் ரஜினி. அப்போது, காயமுற்று மனுத்துவனையில் இருந்த மக்களில் சந்தோஷ் என்பவர், ரஜினியைப் பார்த்து “யார் நீங்க” என்று கேலியாக கேட்டுள்ளார். அச்சமயத்தில் அந்த செய்தி மிகவும் சர்ச்சையானது. அந்த நபர் இணையதளங்களில் பரவலாகப் பேசப்பட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி- முத்துக்கிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் சாம்குமார் என்பவரது வீட்டிலிருந்து இரு சக்கவாகனம் திருடு போயுள்ளது. அந்த வழக்கில் போலிசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி, பண்டாரம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் மணி மற்றும் சரவணன் ஆகியோருடன் இணைந்து திருடியது தெரியவந்துள்ளது. தற்போது இந்த செய்தி சமூகவலைத்தளத்தில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹாஷ்டேகில் ட்ரெண்டாகிவருகிறது. காரணம், நடிகர் ரஜினியைக் கிண்டலடித்த நபர் தான் இந்த சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ரஜினியின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் இச்செய்தியை வைரலாக்கிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்