முகப்புகோலிவுட்

தளபதிக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் – சந்தோஷ் சிவனின் ஆனந்த களிப்பு!

  | February 11, 2019 18:22 IST
Santhosh Sivan

துனுக்குகள்

  • தளபதி படத்திலும் சந்தோஷ் சிவன் தான் ஒளிபதிவாளராக பணியாற்றினார்.
  • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்
  • மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாக போகும் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இத்திரைப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கான தேர்வு விரைவில் துவங்க உள்ளது.  இப்படத்தின் முதல்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறது படக்குழு.  குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த அதிகார பூர்வ தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார். 
 
இப்பதிவில் அவர் தெரிவித்ததாவது,

”தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். 
 
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மற்றும் மலையாள திரையுலக சூப்பர் ஸ்டாரான மம்முட்டி ஆகிய இருவரையும் ஒரே திரையில் நிறுத்திய இயக்குநர் மணிரத்ணத்தின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் “தளபதி”.  நட்பு, காதல், ஏக்கம் போன்றவற்றை மிகவும் உணர்வு பூர்வமாக நம்முள் கடத்திய சிறந்த திரைப்படம் அது.  அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ் சிவன் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் உருவாகவிருக்கும்  ரஜினியின் அடுத்த படத்தில் இணையப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.     
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்