முகப்புகோலிவுட்

“ஆச்சரியகரமான மனிதர் ரஜினி” – ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நெகிழ்ச்சி!

  | August 24, 2019 15:39 IST
Santhosh Sivan

துனுக்குகள்

  • தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது
  • ஜெய்பூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது
  • தளபதி படத்திற்கு பிறக சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்
ரஜினி ஆச்சரியகரமான மனிதர் என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
 
பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்' படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இவர்களுடன் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. மும்பையில் பலத்த மழை பெய்ததால், படப்பிடிப்பை ஜெய்ப்பூருக்கு மாற்றியது படக்குழு. ரஜினி நடித்த ‘தளபதி' படத்துக்குப் பிறகு, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.
 
‘தர்பார்' படப்பிடிப்பில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “அனைவரையும் சரிசமமாக பார்க்கும் ஆச்சரியகரமான மனிதர் ரஜினி.  அவருடைய எளிமை பிரமிக்க வைக்கிறது' என்று தெரிவித்துள்ளார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் 2020-ம் ஆண்டு பொங்கல் விழவை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டள்ளது. தர்பார் படத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரோடு எடுத்துக்கொண்ட செல்ஃபியும் தற்போத சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
 
 
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்