முகப்புகோலிவுட்

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இணையும் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம்.!

  | August 05, 2020 22:30 IST
Sara Arjun

கடைசியாக அவர், கடந்த ஆண்டு வெளியான ‘சில்லு கருப்பட்டி’ படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.

மணிரத்னம் தனது கனவுத் திட்டமான 'பொன்னியன் செல்வன்' படத்தினை இயக்கிவருகிறார். எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்படும் இப்படத்தில் பாலிவுட், கோலிவுட், மாலிவுட் பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இதனை லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம், த்ரிஷா, சரத்குமார், ஐஷ்வாயா ராய், விகரம் பிரபு, ரகுமான், லால், ஜெயராம், ஐஷ்வர்யா லட்சுமி, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாராகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நிறைவடைந்தது. மேலும் COVID 19 காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் புதிதாக ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரபலம் பெற்ற சாரா அர்ஜுன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

fcoo50o

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்' படத்தில் குழந்தையாக இருந்தபோதிலும் பார்க்கும் எல்லோரும் வியந்துபோகும் அளவிற்கு நடித்து, மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர். அதையடுத்து, தமிழில் சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு ஆகிய படங்கலில் நடித்த அவர், கடந்த ஆண்டு வெளியாகி பார்வையாளர்களின் பேராதரவையும், மிகப்பெரிய அங்கீகார்த்தையும் பெற்ற ‘சில்லு கருப்பட்டி' படத்தில் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்கியிருந்தார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com