முகப்புகோலிவுட்

நயன்தாராவுடன் இணையும் வடசென்னை பிரபலம்!

  | September 30, 2019 18:28 IST
Netrikann

துனுக்குகள்

  • சகா படத்தில் நாயகனாக நடித்திருந்தார் சரண்
  • தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
  • தற்போது நயன்தாரா நடிக்கும் திரில்லர் படத்தில் நடிக்கிறார் இவர்
நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாகும் திரில்லர் படத்தில் வடசென்னையில் நடித்த சரண் இணைந்துள்ளார்.
 
கடந்த 2017ம் ஆண்டு சித்தார்த்- ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘அவள்' படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக  நயன்தாராவை வைத்து 'நெற்றிக்கண்' என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
 
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான 'பிளைண்டு' என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வட சென்னை படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜில்லா, கடல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் சகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நயன்தாரா தற்போது விஜய்யின் பிகில், ரஜினியின் ‘தர்பார்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் வரும் அக்2ம் நாள் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்