முகப்புகோலிவுட்

‘நாடோடிகள்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | January 25, 2020 16:34 IST
Naadodigal 2

துனுக்குகள்

 • நாடோடிகள் திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கியுள்ளார்.
 • இப்படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி நடித்துள்ளனர்.
 • இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் நாடோடிகள்-2 படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது.

நாடோடிகள் 2 திரைப்படத்தில், சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் பேனரில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார்.

மேலும், இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வர்பேற்பைப் பெற்றுள்ளது. இப்படதின் அதிகாரப்புர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனல் பறக்கும் ஆக்‌ஷன், போராட்டம், புரட்சி நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் இணையத்தின் வைரலாகப் பறவிவருகிறது.
இப்படம் முன்பு அறிவித்திருந்தபடியே இம்மாதம் திரைக்கு வருகிறது. அதாவது, இந்த ஜனவரி 31-ஆம் தேதி ‘நாடோடிகள்-2' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com