முகப்புகோலிவுட்

பட்டய கிளப்பும் ‘நாடோடிகள்-2’ ட்ரைலர்..!

  | January 25, 2020 14:12 IST
Naadodigal 2

துனுக்குகள்

  • நாடோடிகள் திரைப்படம் 2009-ஆம் ஆண்டு வெளியானது.
  • நாடோடிகள் 2 திரைப்படத்தில் அஞ்சலி, அதுல்யா ரவி நடித்துள்லனர்.
  • இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரனின் இசையமைத்துள்ளார்.
சமுத்திரகனி இயக்கியுள்ள நாடோடிகள்-2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்து 2009-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்'. நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமரசன ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்தது. அதையடுத்து, சமுத்திரக்கனியும், சசிகுமாரும் தனித்தனியாக பல படங்களை, இயக்கியும், நடித்தும் வந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இந்த கூட்டணி ஒன்றிணைந்தது. நாடோடிகள்-2 திரைப்படம் துவங்கியது.

நாடோடிகள் 2 திரைப்படத்தில், சசிகுமாருடன் அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மெட்ராஸ் எண்டர்ப்ரைசஸ் பேனரில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வர்பேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் இந்த ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால், இப்படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படதின் அதிகாரப்புர்வ ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனல் பறக்கும் ஆக்‌ஷன், போராட்டம், புரட்சி நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரைலர் இணையத்தின் வைரலாகப் பறவிவருகிறது. மேலும், ஜஸ்டின் பிரபாகரனின் துடிபான இசை மிரட்டியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்