முகப்புகோலிவுட்

“இப்படி ஒரு இயக்குநர் நமக்கு தேவை” சமுத்திரகனி குறித்து சசிகுமார் பேச்சு!!

  | September 20, 2019 10:26 IST
Sasikumar

துனுக்குகள்

  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
  • இதில் சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் கலந்து கொண்டு பேசினர்
  • ஒரு மரணம் தங்களை இணைத்ததாக சமுத்திரகனி கூறினார்
இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார், அதுல்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘நாடோடிகள்2'.  பணப்பிரச்னை காரணமாக இப்படத்தை வெளியிட தாமதமானதாக பேச்சுகள் எழுந்தன. இதனை அடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் அதுல்யா, அஞ்சலி, சமுத்திரகனி, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு பேசினர்.
 
அப்போது பேசிய சசிக்குமார், படங்களை எடுப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ரிலீஸ் செய்வதில் தான் பிரச்சனை இருப்பதாக தெரிவித்தார்.
  
"ஒரு நடிகரின் ப்ளஸ், மைனஸ் இயக்குநருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படி என்னுடைய ப்ளஸ், மைனஸ் தெரிந்தவர் சமுத்திரக்கனி. நான் எந்த வசனம், எங்கு நின்று பேசினால் நன்றாக இருக்கும் என்பதுவரை தெரிந்து வைத்திருப்பார். அவர் எழுதியிருக்கும் வசனங்களை இந்தப் படத்தில் என் உடலும், ஆன்மாவும் இரண்டும் பேசியிருக்கிறது. அந்த அளவிற்கு வசனங்கள் வலுவாக அமைந்திருக்கிறது.
 
நானும் இவரும் 3 படங்கள் பண்ணிட்டோம். மலையாளத்தில் மோகன்லால் சாரும் - ப்ரியன் சாரும் 42 படங்கள் சேர்ந்து பண்ணியிருக்காங்க. நாங்கள் அந்த அளவுக்குப் போக முடியாவிட்டாலும், 15 படங்களாவது பண்ணனும் என்ற ஆசையிருக்கிறது.  இப்போதுள்ள காலகட்டத்தில் படம் பண்ணுவது எளிது. வெயில், மழை பார்க்காமல் நடித்து முடித்துவிடுவோம். அதை வெளியிடுவது தான் கஷ்டமாக இருக்கிறது. முன்பு சின்ன படங்கள் தான் கஷ்டமாக இருந்தது, இப்போது பெரிய படங்களும் கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்துக்குள் பரணி வந்தவுடன் தான் 'நாடோடிகள் 2' ஆக மாறியது. அவருக்கு முதல் பாகத்தில் எப்படி பெயர் கிடைத்ததோ, அதே போல் 2-ம் பாகத்திலும் கிடைக்கும்.
 
இந்தப் படத்தில் நமீதா என்ற திருநங்கை ரொம்ப பிரமாதமாக நடித்துள்ளார். அவர் மூலமாக அந்தச் சமூகம் படும் வேதனையைப் பதிவு செய்துள்ளார். நன்றாக நடனமாடக் கூடியவர்,
 
சமூகம் சார்ந்து படங்கள் பண்ணுவதால் அவரை சமூகக்கனி என்று தான் சொல்வேன். காமெடி காட்சி வைத்தாலும், அதிலும் ஒரு சமூகக் கருத்து வைப்பார். சமூகம் சாராமல் எந்தவொரு படமும் பண்ணவே மாட்டார். இப்படி ஒரு இயக்குநர் நமக்குத் தேவை. ஆகையால் தான் அவரது படத்தில் எப்போதுமே நடிக்கிறேன்”. இவ்வாறு சசிகுமார் தெரிவித்தார்.
 
பின்னர் பேசிய சமுத்திரக்கனி, சசிக்குமாரின் உறவினரான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதை குறிப்பிட்டு, அவர் மரணிக்கும் பத்து நிமிடங்களுக்கு முன் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி தான் தன்னையும், சசிக்குமாரையும் இணைத்ததாகக் நெகிழ்ச்சியாக கூறினார்.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்