முகப்புகோலிவுட்

சசிகுமாரின் 'எம்.ஜி.ஆர் மகன்' படத்திற்கு எதிர்ப்பு! குழப்பத்தில் படக்குழு!

  | September 27, 2019 18:23 IST
Sasikumar

துனுக்குகள்

  • 'ரஜினி முருகன்' படத்தை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கி வருகிறார்
  • சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது
  • மிர்னாலினி ரவி முதல் முறையாக இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'எம் ஜி ஆர் மகன்' என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பிற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
 
 
இது குறித்து அ.தி.மு.க பிரமுகர் ஆவடி குமார் கூறுகையில், ''கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான, எம்.ஜி.ஆர். தன் குடும்பத்தில் இருந்து, தனிப்பட்ட எவரையும் முன்னிறுத்தியதில்லை. ஆகவே, 'எம்.ஜி.ஆர். மகன்' என்ற தலைப்பை மாற்ற வேண்டும்'' என்று படக்குழுவினரை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த எதிர்ப்பு தற்போது படக்குழுவினரை அதிர்சியடைய வைத்துள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்