முகப்புகோலிவுட்

மீண்டும் சசிகுமாருக்கு வில்லனாவாரா விஜய் சேதுபதி?

  | March 12, 2018 12:39 IST
Sasikumar Next Film

துனுக்குகள்

  • ‘சுந்தரபாண்டியன்’ முதல் பாகம் சூப்பர் ஹிட்டானது
  • இதில் நெகட்டிவ் ஷேடில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்
  • பார்ட் 2-விலும் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளாராம்
கோலிவுட்டில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் இயக்குநர் சசிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். சசிகுமாரே தயாரித்து, ஹீரோவாக நடித்திருந்த ‘சுந்தரபாண்டியன்’ சூப்பர் ஹிட்டானது.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் விக்ரம் பிரபுவை வைத்து ‘சத்ரியன்’ ஆகிய 2 படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். தற்போது, ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க எஸ்.ஆர்.பிரபாகரன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பார்ட் 2-விலும் கதாநாயகனாக சசிகுமார் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த லக்ஷ்மி மேனனும், நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்த விஜய் சேதுபதியும் ‘சுந்தரபாண்டியன் 2’விலும் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்