முகப்புகோலிவுட்

‘தளபதி 64’ டைட்டில் வைக்கும் முன்பே ரூ.55 கோடிக்கு மேல் விற்பனை..!!

  | December 07, 2019 09:45 IST
Thalapathy 64

துனுக்குகள்

  • தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
  • இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
  • இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது.
சாட்டிலைட் உரிமையை அடுத்து விஜயின் ‘தளபதி 64' திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைக்கான வியாபாரமும் பல கோடிக்கு முடிந்ததாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 64' என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஷாந்தனு பாக்கியராஜ், ஆண்டனி வர்கீஸ் மற்றும் ‘96' திரைப்படத்தில் நடித்த கௌரி ஜி கிஷான், கைதி படப் புகழ் அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.  சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் சாட்டிலைட் உறிமையை சன் தொலைக்காட்சி சமீபத்தில் பெற்றுள்ளது.
இப்படத்தின் 3-வது கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது. மேலும், அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கும் இத்திரைப்படத்துக்கு இன்னும் தலைப்பு கூட வைக்கப்படாத நிலையில், இதன் டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகளும் முன்னணி நிறுவனக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 64-ன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனமும், இதன் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனமும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் மட்டும் ரூ. 55 கோடிகளுக்கும் மேல் விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com