முகப்புகோலிவுட்

"அனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்" - நடிகர் சேரன் ட்வீட்..!!

  | July 02, 2020 10:24 IST
Sathankulam Death

துனுக்குகள்

 • தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தந்தை – மகன் மரண வழக்கில்
 • சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல்
 • அரசும் சட்டமும் மக்களுக்கான பாதுகாப்புக்காகத்தான்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் தந்தை – மகன் மரண வழக்கில் போலீஸ் எஸ்.ஐ. ரகு கணேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில், தந்தை – மகன் உயிரிழந்தது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் எஸ்.ஐ. பால கிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கை திருத்தம் செய்யப்பட்டு, கொலை வழக்காக ஐ.பி.சி. பிரிவு 302 சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அதிரடி முடிவிற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரபல நடிகர் சேரன் இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் அதிகாரிகளை பாராட்டியுள்ளார். 

"அரசும் சட்டமும் மக்களுக்கான பாதுகாப்புக்காகத்தான்... கொரோனா காலம் என்றும் பார்க்காமல் களம்இறங்கி பத்து குழுக்களாக இயங்கி அதிரடி கைதுகளை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் நீதித்துறையில் நேர்மையுடன் இயங்கும் அனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.", என்று குறிப்பிட்டுள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com