முகப்புகோலிவுட்

நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நடத்திய அஜினோமோட்டோ /MSG விழிப்புணர்வு பிரச்சாரம்!

  | October 21, 2019 17:04 IST
Sathyaraj

துனுக்குகள்

 • இவர் நீட் பிரச்னை குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்
 • தந்போது அஜினோ மோட்டோ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
 • மருத்துவதுறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் எழுதி வருகிறார் இவர்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் பெரியாரிய சிந்தனையாளருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்ட சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களில்  ஒருவரான இவர் உலகின் மிக பெரிய மதிய உணவு திட்டமான அக்ஷய பாத்தி ராவின் விளம்பரத் தூதுவர்.
 
மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வு பற்றியும் திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இவர் சமீபத்தில் அஜினோமோட்டோ(MSG - MONOSODIUM GLUTAMATE) கலந்துள்ள உணவுகள் பற்றி ஒரு கலந்துரையாடல் நடத்தினார்.

“MSG  விளைவுகள் பற்றி உலகெங்கும் பேசியுள்ளார் எனினும் , இது குறித்து அதிகாரபூர்வமான கருத்துகள் இன்றுவரை வெளிவரவில்லை. FDA அஜினமோட்டோவை பொதுவாக அனுமதித்தாலும் அஜினமோட்டோ உள்ள உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக உபயோகித்தால் அடிவயிற்றில் பிரச்சனைகள், தைரொய்ட்
செயல்பாட்டில் பிரச்சனைகள் ஹார்மோன் சம நிலையற்ற நிலை, சாப்பாடு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது .குழந்தைகளும் , கர்பிணி பெண்களும் அஜினமோட்டோ உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்”. என கூறியிருக்கிறார்.
 
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com