முகப்புகோலிவுட்

சத்யராஜின் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ டீஸர் வெளியானது..!

  | December 10, 2019 14:27 IST
Theerpugal Virkapadum

துனுக்குகள்

  • தீர்ப்புகள் விற்கப்படும் திரைப்படத்தில் கதாநாயகனாக சத்யராஜ் நடிக்கிறார்.
  • இப்படத்தை தீரன் இயக்கியுள்ளார்.
  • இப்படம் ஆக்‌ஷன் ட்ராமா வகையைச் சேர்ந்தது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்'. ஹனி பீ க்ரியேஷன்ஸ் பேனரில் சஜீவ் மீராசாஹிப் ராவ்தர் தயாரிக்கும் இப்படத்தை தீரன் எழுதி இயக்கியுள்ளார்.

1980, 90-களில் தனக்கென வில்லன், கதாநாயகன் என தனக்கென தனி முத்திரையோடு முன்னணி நடிகராக நடித்துவந்த சத்யராஜ், அதன் பிறகு பல படங்களில் குனச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துவந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் கதாநாயகனாக புதிய ஆக்‌ஷன் ட்ராமா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் நேற்று வெளியாகி வைரலாகிவருகிறது. இப்படத்துக்கு எஸ்.என் ப்ரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் கேமரா வேலைகளை அஞ்சி கையாள, பிரபல எடிட்டர் ரூபனின் உதவி தொகுப்பாளர் சரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்