முகப்புகோலிவுட்

நண்பன், தலைவா, மெர்சல் படங்களை தொடர்ந்து ‘பிகில்’ படத்தில் இணையும் பிரபல நடிகர்?

  | June 25, 2019 18:53 IST (India)
Sathyaraj

துனுக்குகள்

  • அட்லி இப்படத்தை இயக்கி வருகிறார்
  • ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்து வருகிறார்
  • ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது
 
தெறி, மெர்சல், படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் இணைந்திருக்கும் படம் ‘பிகில்'. இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், இன்னும் பலர் நடிக்கிறார்கள்.
 
மேலும் விஜய்யின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் இருப்பது போல் இருந்தது. ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
விறுவிப்பாக நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து வரும் தீபாவளி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய்யின் நண்பன், தலைவா, மெர்சல் படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்