முகப்புகோலிவுட்

மிரட்டலான ஆக்‌ஷன் நிறைந்த ‘மாஃபியா’ டீஸர் வெளியானது...!

  | December 10, 2019 14:45 IST
Mafia

துனுக்குகள்

  • மாஃபியா திரைப்படத்தை கார்திக் நரேன் இயக்கியுள்ளார்.
  • இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
  • பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் மாஃபியா : சாப்டர்-1 திரைப்படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகி வைரலாகிவருகிறது.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தியடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் மாஃபியா : சாப்டர்-1. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். கோகுல் பினாய் இப்படத்திற்கான கேமரா வேலைகளை கையாள, ஸ்ரீஜித் சாரங் ப்டத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் முதல் டீஸர் இரு மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் இரண்டாவது டீஸர் வெளியானது. இப்படத்தின் டீஸர் வெளியாகி 24 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது. அடுத்தடுத்து ஆக்‌ஷன், த்ரில்லர் என பல படங்களில் நடித்துவரும் அருண் விஜயை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்