முகப்புகோலிவுட்

"சர்வதேச திரைப்பட விழா" - சிறந்த குறும்படத்திற்கான விருதை பெற்ற உதயாவின் 'செக்யூரிட்டி'.!

  | September 21, 2020 11:09 IST
Port Blair International Film Festival

துனுக்குகள்

 • அண்மையில் நிலவி வந்த லாக் டவுன் காலத்தில் பல நடிகர்கள் தங்களுடைய பல
 • 1998ம் ஆண்டு வெளியான 'இனி எல்லாம் சுகமே' என்ற படத்தின் மூலன் நடிகராக
 • போர்ட் பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய குறும்படம்
அண்மையில் நிலவி வந்த லாக் டவுன் காலத்தில் பல நடிகர்கள் தங்களுடைய பல திறமைகளை வெளிப்படுத்தி வந்தனர். சமையல், யோகா, உடற்பயிற்சி போன்ற பல விஷயங்களில் பல நடிகர் நடிகைகள் ஈடுபட அதற்கு நிகராக சில நடிகர்கள் குறும்படம், Youtube சேனல் என்று ஒருபுறம் அசத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஏ.எல். விஜயின் சகோதரரும் பிரபல நடிகருமான ஏ.எல். உதயா அவர்கள் அண்மையில் புதிய அவதாரம் ஒன்றை எடுத்தார். 

1998ம் ஆண்டு வெளியான 'இனி எல்லாம் சுகமே' என்ற படத்தின் மூலன் நடிகராக அறிமுகமான இவர் இதுவரை 9 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநராக களமிறங்கி உள்ள அவர் 'செக்யூரிட்டி' என்ற குறும்படத்தினை உருவாக்கினார். இதுகுறித்து அவர் அப்போது வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.

"இமயம் மனம் மகிழ்ந்து என்னையும் என் படக் குழுவினரையும் பாராட்டி சென்றார். எனது இயக்கத்தில் உருவான குறும்படம் செக்யூரிட்டி முழு படத்தையும் பார்த்துவிட்டு படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு வியந்து பாராட்டிய இயக்குனர் இமயத்திற்கு நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு பல பிரபலங்கள் வெளியிட்ட இந்த குறும்படம் தற்போது போர்ட் பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இந்திய குறும்படம்' என்ற விருதை பெற்றுள்ளது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com