முகப்புகோலிவுட்

வீடியோ காலில் ‘தளபதி’யும் ‘மாஸ்டர்’ படக்குழுவும்..! மாளவிகா மோகனன் போட்ட சில் ட்வீட்..!

  | March 27, 2020 12:20 IST
Thalapathy Vijay

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக 'மாஸ்டர்' ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 700- ஐ ஏட்டி இருப்பதால், மேலும் தொற்று பரவாமல் அல்லது தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்து படப்பிடிப்புகள், நிகழ்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு திரைப் பிரபலங்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அதே சமயம் அவர்கள் தங்களது வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதையும், சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்ட ட்வீட் மற்றும் புகைப்படம் செம வைரலாகிவருகிறது. அதில் அவர் நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத், இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ்  ஆகியோருடன் கான்ஃபெரென்ஸ் வீடியோ கால் பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து “Problems will come and go.. கோஞ்சம் சில் பண்ணு மாப்பி! உண்மையில் ஹேங்கவுட் செய்ய முடியாதபோது நாங்கள் எப்படி ஹேங் அவுட் செய்கிறோம் பாருங்க. ‘மாஸ்டர்' டீம் சமூக-தொலைதூரத்தை கடைப்பிடிக்கிறது. நீங்கள்?” என பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த ட்வீட்டில் விஜய் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விஜயின் கோடிக்கணக்கான் ரசிகர்களுக்கு இது விழிப்புணர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்' இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முறமாக நடைபெற்றுவருகிறது. வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த கொடிய வைரஸ் பரவலின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com