முகப்புகோலிவுட்

மகனை மகிழ்விக்க அஜித் பட ஹீரோயின் செய்ததை பாருங்க.! ஏ.ஆர். ரகுமாகுக்கும் இதில் பங்கு உண்டு..

  | August 04, 2020 23:01 IST
Dil Bechara

சமீபத்தில் வெளியான ‘தில் பெச்சாரா’ படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் இடம்பெற்றுள்ள ‘குல்கே ஜீனே கா’ பாடலுக்கு ஆடியுள்ளனர்.

‘ஃபவ் ஸ்டார்' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கனிகா. தமிழ் நாட்டை சேர்ந்த நடிகையாக இருந்தாலும் தமிழில் எதிரி, ஆட்டோகிராஃப், டான்சர் என மிக சொற்பமான படங்களிலேயே நடித்த அவர், 'தல' அஜித் மூன்று வேடங்களில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘வரலாறு' படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமாக அறியப்படுகிறார். மலையாளத்தில் பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்த அவர், தமிழில் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி' படத்தில் கௌரவ வேடத்தில் காணப்பட்டார்.

கிட்டத்தட்ட 6 வருட இடைவெளி விட்டு, மீண்டும் தமிழில் விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இப்படத்துகான டப்பிங் பணியில் ஈடுபடும்போது புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். விக்ரமின் நடிப்பில் வரவிருக்கும் ‘கோப்ரா' திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிகா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக காணப்படுகிறார். அதில் அவர் பதிவிடும் அதிகபட்சமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அவர் தனது மகன் சாய் ரிஷியுடன் நேரத்தை செலவிடுவதாக தான் இருக்கும்.

இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், தன் மகனை மகிழ்ச்சியுடனும் சிரிப்புடனும் வைத்துக்கொள்ள ஒரு முறையை கையாண்டுள்ளது தெரிகிறது. தன் மகன் இன்று காலை சோகமாக இருப்பதாக தெரிந்துகொண்ட அவர், அவரை சிரிக்க வைக்கவும் நல்லபடியாக உணரவைக்கவும் அவரி இழுத்து பிடித்தபடி ஒரு அழகான நடன அசைவுகளை செய்துள்ளார்.

சாய் ரிஷிக்கு நளினமாக ஆட வரவில்லை என்றாலும், அம்மாவின் அன்பிற்காக முகத்தில் புண்ணகையுடன் ‘தில் பெச்சாரா' படத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் இடம்பெற்றுள்ள ‘குல்கே ஜீனே கா' பாடலுக்கு ஆடியுள்ளார்.    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com