முகப்புகோலிவுட்

“22 ஆண்டுக்கு முன்னர் ‘நேருக்கு நேர்’ படத்தில…”-செல்வராகவன் பகிர்ந்த ட்வீட்;தொடரும் NGK ஃபீவர்!

  | June 06, 2019 13:09 IST
Ngk

“22 ஆண்டுக்கு முன்பு ‘நேருக்கு நேர்’ படத்தில் நடிப்பே வரவில்லை என்று உன்னை எல்லாரும் கேலி கிண்டல் செய்தார்கள்"

துனுக்குகள்

  • என்.ஜி.கே படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்
  • செல்வராகவன் நீண்ட ப்ரேக்கிற்குப் பிறகு இயக்கும் படம் என்.ஜி.கே
  • மே 30 ஆம் தேதி என்.ஜி.கே ரிலீஸ் ஆனது
சூர்யா நடிப்பில் கடந்த மே 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் என்.ஜி.கே. நீண்ட பிரேக்கிற்க்குப் பிறகு செல்வராகவன் இந்தப் படத்தை இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சூர்யா, முதன்முறையாக முழு அரசியல் படத்தில் நடித்துள்ளதால், அவரது ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். 

அப்படி ஒரு ரசிகர் ட்விட்டரில் பகிர்ந்த ட்வீட்டை இயக்குநர் செல்வராகவன் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

“22 ஆண்டுக்கு முன்பு ‘நேருக்கு நேர்' படத்தில் நடிப்பே வரவில்லை என்று உன்னை எல்லாரும் கேலி கிண்டல் செய்தார்கள்.
அதே மக்கள் இன்று தமிழ் சினிமாவில் உன்னை விட்டா சிறப்பாக நடிப்பதற்கு யாரும் இல்லை என்று கொண்டாடுகிறார்கள்.

என்.ஜி.கே திரைப்படத்தில் உன் கை விரல் கூட நடிக்கும் அண்ணா” என்று நெகிழ்ச்சியுடன் ஹரி என்கிற ரசிகர் ட்வீட்டினார். அதை செல்வராகவன் ரீ-ட்வீட் செய்துள்ளார். 

 
முன்னதாக செல்வராகவன், என்.ஜி.கே குறித்து, “என்.ஜி.கே படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நட்றி. நீங்கள் காட்டிய அன்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. என்.ஜி.கே கதாபாத்திரத்தில் பல ரகசியங்கள் உள்ளன. படத்தை கவனமாக பார்ப்பதன் மூலம் அந்த ரகசியங்களை அறிந்து கொள்ளலாம். படத்தை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுங்கள்” என்று உணர்வுபூர்வமாக ட்வீட்டியிருந்தார். 
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்