முகப்புகோலிவுட்

தனுஷின் ‘நான் ருத்ரன்’ படத்தில் இணையும் செல்வராகவன்.??

  | June 27, 2020 12:00 IST
Dhanush

இப்படத்தின் ஒரு சில பகுதிகள் 600 வருடங்களுக்கு முன் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம்.

தமிழ் சினிமாவில், நடிகர் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், மேலும் 2016-ஆம் ஆண்டில் வெளியான ப.பாண்டியுடன் இயக்குநராகவும் அறிமுகமானார். ‘ப. பாண்டி'யின் வெற்றிக்குப் பிறகு, தனுஷ் தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக ‘நான் ருத்ரன்' என்ற பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். தேனாண்டால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம், ஆரம்ப படப்பிடிப்புக்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

அதையடுத்து, தனுஷும் வட சென்னை, மாரி-2, அசுரன், பட்டாஸ், ஜகமே தந்திரம் என வரிசையாக படங்களில் பிஸியாகிவிட்டார். பூட்டுதல் முடிந்ததும் ‘ஜகமே தந்திரம்' வெளியான பிறகு, தனுஷ் தனது ‘நான் ருத்ரன்' திரைப்படத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

அதிதி ராவ் ஹைதாரி, நாகர்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அனு இம்மானுவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் ஒரு சில பகுதிகள் 600 வருடங்களுக்கு முன் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால், அந்த பழங்காலத்து காட்சிகள் அனைத்தையும், தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனைக் கொண்டு இயக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமே சென் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் பாராட்டுக்களைப் பெற்ற ‘ஆயிரத்தில் ஒருவன் ‘ திரைபடத்தை இயக்கியுள்ளதால், தனுஷ் இந்த முடிவை எடுத்துள்ளாராம். மூத்த சகோதரரரும் தனது இளைய உடன்பிறப்புக்கு இந்த உதவி செய்ய ஆர்வமாக உள்ளார் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இவர்களது கூட்டணியில், அடுத்ததாக தயாராகவுள்ள ‘புதுப்பேட்டை-2' படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் செல்வராகவன் தற்போது பிஸியாக உள்ளார். இப்படம் 2021-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் படப்பிடிப்பைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com