முகப்புகோலிவுட்

ஒரு கைக் கடிகாரத்துக்காக நடித்து கொடுத்த ஷாருக் கான்..! பரவும் கமல் ஹாசன் வீடியோ..! #20YearsOfHeyRam

  | February 18, 2020 17:44 IST
#20yearsofheyram

“ஹேராம் படத்தில் ஒரு பகுதியாக இருந்தாலே போது - ஷாருக் கான்”

2000-ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளியான ‘ஹேய் ராம் திரைப்படத்தின் 20-ஆம் ஆண்டு வெளியீட்டு தினம் இன்று. அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #20YearsOfHeyRam ஹாஷ்டேகினை ட்ரெண்ட் செய்து கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், இப்படம் குறித்தும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் பற்றியும் கமல் ஹாசன் நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

அதில் கமல் ஹாசன் “ஹேராம் படத்தின் பட்ஜட் அறிந்த ஷாருக் கான் எந்த பணமும் வாங்காமல், கதையின் முக்கியத்துவம், அவரின் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து இலவசமாக நடித்துக் கொடுத்தார், மாறாக ஒரு கைக் கடிகாரத்தை மட்டுமே பெற்றுக் கொண்டார்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது.

இப்படத்தில் கமல் ஹாசன் - ஷாருக் கானுடன், ராணி முக்கர்ஜி, வசுந்த்ரா தாஸ், ஹேமமாலினி, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.


    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்