முகப்புகோலிவுட்

பொம்மையுடன் கலக்கும் ஆர்யா..! வெளியானது ‘டெடி’ டீஸர்..!

  | March 10, 2020 11:08 IST
Teddy

குழந்தைகளைக் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘டெடி'. ஆர்யாவுக்கு அடுத்ததாக டெடி பியர் பொம்மை முக்கிய கதாபாத்திரமாக அமைந்துள்ளது. மேலும், ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவியும், நடிகையுமான சாயிஷா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சாக்‌ஷி அகர்வால், சதிஷ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை ஸ்டூடுயோ க்ரீன் பேனரின் கீழ் KE ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்துக்கு எஸ். யுவா கேமரா வேலைகளைப் பார்க்க டி. சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குழந்தைகளைக் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com