முகப்புகோலிவுட்

சர்வதேச நட்பு தினம்.! தோழர்களுக்கு வாழ்த்து சொன்ன ஷாந்தனு.!

  | July 30, 2020 12:52 IST
Shanthanu

ஷாந்தனு, தற்போது விஜயுடன் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து, படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

ஜூலை 30-அம் தேதியான இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், நடிகர் ஷாந்தனு பாக்கியராஜ் தனது தோழர்களுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள இந்த பூட்டுதல் காலத்தில் ஷாந்தனு மக்களிடையே மிகவும் நெறுக்கமாகிவிட்டார் எனக் கூறலாம், காரணம் தினமும் புகைப்படம், வீடியோ, கருத்துப்பதிவு, சுவாரஸ்யமான செய்திகள், சக நடிகர்களுடனான உறையாடல் என ஏதேனும் ஒரு வகையில் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார்.

தனது தந்தை கே. பாக்யராஜின் ‘வேட்டிய மடிச்சு கட்டு' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஷாந்தனு, ‘சக்கரகட்டி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். மேலும் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். கடைசியாக மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்' திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் காணபட்ட ஷாந்தனு, தற்போது விஜயுடன் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து, படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். மேலும், இரண்டு புதிய படங்களில் ஹீரோவாவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இன்று சர்வதேச நட்பு தினமான இன்று, Buddy தனது ட்விட்டரில் “எழும் போது கை தந்து, அழும் போது கடன் தந்து, இளைபாற மடி தந்து, எனக்கென வாழ்வது நீதானே Happy Friendship day தோழர்களே” என தனது முதல் படத்தில் இடம் பெற்று, ஏ.ஆர் ரகுமான் இசையில் மிகப்பெரிய ஹிட்டான ‘டாக்ஸி டாக்ஸி' பாடலில் வரும் நா. முத்துக்குமாரின் வரிகளை நினைவுகூர்ந்து தனது நண்பர்களுக்கு ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com