முகப்புகோலிவுட்

'அடுத்து நீங்களா..! வாங்க வாங்க' - அரண்மனை 3-யில் இணையும் பிக் பாஸ் பிரபலம்

  | February 17, 2020 12:05 IST
Aranmanai 3

சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளாக அரண்மனை என்ற திகில் படத்தை எடுத்து வருகின்றார்

துனுக்குகள்

  • 'அடுத்து நீங்களா..! வாங்க வாங்க'
  • அரண்மனை 3-யில் இணையும் பிக் பாஸ் பிரபலம்
  • ஒரு படத்தை தனி ஆளாக இருந்து என்னால் இயக்க முடியும்
சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒரு அரசியல்வாதியாக காட்டியவர் சுந்தர் சி, இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கமல்ஹாசனை நம் அனைவருக்கும் அன்பே சிவம் என்ற படத்தின் மூலன் காண்பித்தவர் சுந்தர் சி. நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்ஷன் என்று சுந்தர் சி எடுக்காத கதைக்களம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் அண்மையில் தனியார் நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் நான் சிறந்த இயக்குனர் என்று பலரும் கூறுகின்றனர், ஆனால் எனக்கு நடிகர்களிடம் கதை சொல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று என்று கூறினார். 

ஒரு படத்தை தனி ஆளாக இருந்து என்னால் இயக்க முடியும், ஆனால் கதை சொல்ல வேண்டும் என்றால் சத்தியமாக என்னால் முடியாது என்றார். சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளாக அரண்மனை என்ற திகில் படத்தை எடுத்து வருகின்றார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி நல்ல வசூலை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் மூன்றாம் பாகத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் இந்த படத்தில் கதையின் நாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் மேலும் ஒரு கதையின் நாயகியாக பிக் பாஸ் பிரபலமான சாக்‌ஷி அகர்வால் இணையவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்