முகப்புகோலிவுட்

'சூர்யா தேவிக்கு கொரோனா' : சுகாதாரத்துறை அவரை தேடிவருகிறது - வனிதா விஜயகுமார்..!

  | July 26, 2020 11:17 IST
Vanitha Vijayakumar

துனுக்குகள்

 • தனது திருமணத்தை அறிவித்ததிலிருந்தே தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்து
 • இந்த நிகழ்வு ஒரு பக்கம் இருக்கம், இந்த பிரச்சனையில் சூர்யா தேவி என்ற
 • சூர்யா தேவியை காணவில்லை என்றும், அவருக்கு கொரோனா தொற்று
வனிதா விஜயகுமார் பீட்டர் பாலுடனான தனது திருமணத்தை அறிவித்ததிலிருந்தே தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்து வருகிறார். அவரது திருமணத்திற்குப் பிறகு பல பிரச்சினைகள் முளைத்தன. பீட்டர் பாலினை  பிரிந்த அவருடைய மனைவி, வனிதா மற்றும் பீட்டர் பால் ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வந்தார். பிரபல நடிகை கஸ்தூரி இந்த நிகழ்விற்காக ஒருமுறை அவரை பேட்டிகண்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்வு ஒரு பக்கம் இருக்கம், இந்த பிரச்சனையில் சூர்யா தேவி என்ற பெண்ணும் தனது கருத்துக்களை முன்வைக்க, வனிதா மற்றும் சூர்யா தேவியிடையே வார்த்தை போர் மூண்டது. சில தினங்களுக்கு முன்பு வனிதா அளித்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் தனது மீதும் வனிதா புகார் கொடுத்திருப்பதாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது வனிதா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "சூர்யா தேவியை காணவில்லை என்றும், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் சுகாதாரத்துறையும் காவல்துறையும் அவரை தேடிவருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்றும் இது அவருடைய பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றது என்றும் அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com