முகப்புகோலிவுட்

யோகி பாபு நடிக்கும் “பப்பி” படத்திற்கு இந்து அமைப்பு எதிர்ப்பு!

  | August 20, 2019 16:00 IST
Puppy

துனுக்குகள்

 • இப்படத்தின் போஸ்டரில் நித்யாநந்தா புகைப்படம் இடம் பெற்றிருந்தது
 • இப்படத்தை எதிர்த்து சிவசேனா அமைப்பு புகார் அளித்துள்ளது
 • இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு
நித்யானந்தா புகைப்படம் சர்ச்சை காரணமாக யோகி பாபு நடிக்கும் ‘பப்பி' படத்திற்க எதிராக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது சிவ சேனா அமைப்பு.
 
இயக்குநர் நட்டு தேவ் இயக்கத்தில் வருண் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பப்பி'. இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகும் வருண், வனமகன், போகன், ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க இப்படத்திற்கு தரண்குமார் இசை அமைக்கிறார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.. இது வெளியான சில நிமிடங்களில் டுவிட்டரில் டிரெண்டானது. இளைஞர்களை கவரும் வகையில், இந்த போஸ்டரில் எழுத்து-இயக்கம் 'முரட்டு சிங்கிள்' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் முழு நீல பாலியல் படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவருடைய படம் ஒரு பக்கமும், மற்றொரு புறம் நித்யானந்தாவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தன.
 
இதனை எதிர்த்து ஆபாசப் பட நடிகர் ஒருவரின் படத்துடன், நித்யானந்தாவின் படத்தையும் சேர்த்து, மோஷன் போஸ்டர் வெளியிட்ட பப்பி படக்குழுவினர் மீது சிவசேனா அமைப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.
 
இந்நிலையில் சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த புகார் மனுவை பகிர்ந்து பலரும் “பிரே ஃபார் முரட்டு சிங்கிள்” என்று ட்விட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com