முகப்புகோலிவுட்

'இப்படி தான் நடிக்கணும்..' - நயன்தாரா வெளியிட்ட மலரும் நினைவுகள்

  | April 28, 2020 12:15 IST
Nayanthara

துனுக்குகள்

  • லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான
  • தற்போது, அவர் மீண்டும் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தில்
  • 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன்
லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாரா இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதையடுத்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கத்தில் ‘நெற்றிக்கண்', மீண்டும் ரஜினியுடன் ‘அண்ணாத்த', விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நயன்தாரா கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான வரலாற்றுத் திரைப்படமான ‘சாய் ரா'வில் சிரஞ்சீவியுடன் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, அவர் மீண்டும் ஒரு வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் தங்களது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர் பிரபலங்கள். 

அண்மைக் காலமாக பல நடிகர் நடிகைகள் தங்களுடைய throwback நினைவுகளை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது நடிகை நயன்தாராவும் ஒரு அழகிய நினைவை பகிர்ந்துள்ளார். 2015ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் நடிப்பில் வெளியான படம் தான் 'நானும் ரவுடி தான்'. இந்த படத்தில் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் காட்சிகளை பற்றி விவரிக்கும் ஒரு காணொளியைதான் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com