முகப்புகோலிவுட்

'சமையலுக்கு சற்று ஓய்வு' - 'நளினமாய் நடனமாடும் நடிகை சாயிஷா..!!'

  | May 15, 2020 14:13 IST
Sayyesha Arya

துனுக்குகள்

 • ஜெயம் ரவியின் ‘வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ்
 • இந்த ஊரடங்கு நேரத்தில் கணவர் ஆர்யா உடற்பயிச்சி செய்ய
 • அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு
ஜெயம் ரவியின் ‘வனமகன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. பிரபல பாலிவுட் நடிகர் சுமீத் சைகலின் மகளான அவர், கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் ஆர்யாவுடன் காதல் கொண்டு, கடந்த ஆண்டு இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, சூர்யாவுடன் ‘காப்பான்' திரைப்படத்தில் நடித்த சாயிஷா, தற்போது ஆர்யாவுடன் ‘டெடி' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார்.

இந்த ஊரடங்கு நேரத்தில் கணவர் ஆர்யா உடற்பயிச்சி செய்ய அவருக்கு அசத்தலான கேக் வகைகளை செய்துகொடுத்து அசத்தி வரும் சாயிஷா தற்போது மீண்டும் தனக்கு மிகவும் பிடித்த நடனத்தின் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். அண்மைக் காலமாக நடனத்திற்கு சற்று ஓய்வு கொடுத்த அவர் தற்போது மீண்டும் நடனமாட தொடங்கியுள்ளார்.  

தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அவர் நடனமாடுகிறார். சாயிஷா சமையல் மட்டும் இன்றி நடனத்திலும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com