முகப்புகோலிவுட்

'அம்மனுடன் Selfie எடுக்கும் பாலாஜி..!!' - ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா

  | June 04, 2020 13:13 IST
Nayanthara Tweet

துனுக்குகள்

 • இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட
 • அம்மனாக நடிப்பதால் இப்படத்துக்காக நயன்தாரா விரதமிருந்து நடித்தது
 • கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்
ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்'. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்து, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கின. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார் அந்த படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அவர்கள். இந்நிலையில் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் போஸ்ட் production பணிகள் பாதியில் தடைப்பட்டன. 

இந்நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அந்த படத்தின் நாயகி நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்போது போஸ்ட் production பணிகள் தொடங்க தளர்வு வழங்கப்பட்டதால் முழுவீச்சில் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அம்மனாக நடிப்பதால் இப்படத்துக்காக நயன்தாரா விரதமிருந்து நடித்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. மெரினா, அவள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மேலும், இப்படம் இந்த ஊரடங்கு காலம் முடிந்தவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com