முகப்புகோலிவுட்

காதல் பிரிவு குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் உருக்கம்!   

  | October 10, 2019 12:48 IST
Shruthi Haasan

துனுக்குகள்

 • விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்
 • காதல் பிரிவு குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார் இவர்
 • தன்னை எளிதில் ஆதிக்கம் செய்து விடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்
நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர். 

இது குறித்து அண்மையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், "நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்" என்றும், "இப்போதும் என்னிடம் எந்த பார்முலா இல்லை. நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர். இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன்.

அது வரும்போது 'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்" என ஸ்ருதிஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  
ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தில் நடித்துவருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
  

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்
  Listen to the latest songs, only on JioSaavn.com