முகப்புகோலிவுட்

ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட ‘யசோதா’ ட்ரைலர்.!

  | June 19, 2020 23:36 IST
Yashoda

இந்த குறும்படத்தை ரூபன் தொகுத்துள்ளார்.

நடிகை ஷ்ருதி ஹாசன் ‘யசோதா' என்ற குறும்படத்தின் ட்ரைலரை இன்று வெளியிட்டார். நடிகை ஸ்ரீபிரியா இக்குறும்படத்தை, கமீலா நாசர் மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார்.

‘யசோதா' குறும்படம் முழுவதுமாக மொபைலில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு பாடகர்-நடிகர் க்ரிஷ் பின்னணி இசையமைக்க, பாடல்களை நிருத்யா பிள்ளை பாடியுள்ளார். மேலும், இந்த குறும்படத்தை ரூபன் தொகுத்துள்ளார்.

முன்னதாக இந்த குறும்படத்தின் முதல் தோற்றத்தை ‘உலக நாயகன்' கமல் ஹாசன் வெளியிட்டு “அதனைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ‘யசோதா'வின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை ஷ்ருதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில், இந்த குறும்படம் இணையத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com