முகப்புகோலிவுட்

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் ஸ்ருதி ஹாசன்…?

  | April 19, 2019 17:47 IST
Shruti Haasan

துனுக்குகள்

  • தமிழில் 7ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
  • சிங்கம் 3 படத்தில் மீண்டும் சூர்யாவுடன் நடித்திருந்தார்
  • 3 படத்தில் தனுஷுடன் நடித்திருந்தார்
தமிழில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானார் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். அதன் பின்னர் 3,பூஜை, சிங்கம் 3 ,புலி, வேதாளம் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார்.
 
சமீகபமாக  அவர் எந்த படங்களிலும் நடிக்கமால் இருந்தார். தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக முடிவு செய்திருக்கிறார்.
 
சில நாட்களுக்கு முன்பு லண்டன் காதலன் மைக்கேல் கோர்சேலுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படது.  
 
இதனை மறுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எப்போது நினைக்கிறேனோ அப்போது திருமணம் செய்துகொள்வேன் என திருமணம் பற்றிய முடிவை தெரிவித்திருக்கிறார். ஸ்ருதிக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த வண்ணமிருப்பதால் புதுப்படங்களை ஒப்புக்கொள்ள விருக்கிறார். விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளேன். எனது தந்தை கமல்ஹாசன் கட்சியில் சேர்வீர்களா என்கிறார்கள். அரசியலில் எனக்கு இப்போதைக்கு ஆர்வம் இல்லை. ஆனால் எனது தந்தை மக்கள் வாழ்வு வளம் பெறுவதற்காக தனது கடினமான உழைப்பை தொடர்ந்து தருவார்' என்றார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்