முகப்புகோலிவுட்

சின்னத்திரையில் களமிறங்கும் ஸ்ருதி ஹாசன்

  | October 22, 2018 11:41 IST
Shruti Haasan

துனுக்குகள்

  • ‘லக்’ எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி
  • கடைசியாக சூர்யாவின் ‘சி3’ (சிங்கம் 3) படத்தில் ஸ்ருதி நடித்திருந்தார்
  • ‘ஹலோ சகோ’ நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்
‘உலக நாயகன்' கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், 2009-ஆம் ஆண்டு ஹீரோயினாக ‘லக்' எனும் பாலிவுட் படத்தில் அறிமுகமானார். 2011-ஆம் ஆண்டு ‘ANANGANAGA O DHEERUDU & 7-ஆம் அறிவு' படங்களின் மூலம் டோலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் என்ட்ரியானார் ஸ்ருதி.

இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல வெற்றிபப் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் ‘சி3' (சிங்கம் 3) படத்தில் ஸ்ருதி நடித்திருந்தார்.
 
தற்போது, ‘ஹலோ சகோ' என்ற புதிய நிகழ்ச்சியை ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம். இதை ஸ்ருதியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, அதன் ப்ரோமோவையும் ஷேரிட்டுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்