முகப்புகோலிவுட்

பாலிவுட்டில் கேங்க்ஸ்டராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்..!

  | April 26, 2019 16:16 IST
Shruti Haasan

துனுக்குகள்

  • மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார்
  • வித்யூத் ஜம்வாலும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்
  • விஜய் சேதுபதியோடு லாபம் படித்தில் நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்
கமலின் மகள் ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 படத்திற்குப் பிறகு வேறெந்த படங்களிலும் நடிக்கவில்லை. சில நாட்கள் இடைவெளிவிட்டிருந்த இவர் எஸ்.பி ஜனநாதன் இயக்கும் ‘லாபம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில்  துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.
 
முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு ‘பவர்' என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். 1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம் வரும் ஜூலை 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்