முகப்புகோலிவுட்

தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ஸ்ருதிஹாசன்

  | June 21, 2018 16:20 IST
Shruti Haasan

துனுக்குகள்

  • ஸ்ருதிஹாசன் ‘லக்’ எனும் பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார்
  • கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்திருந்தார்
  • ‘லென்ஸ்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது
பிரபல நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ‘லக்’ எனும் பாலிவுட் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து கோலிவுட்டிலும் ‘7-ஆம் அறிவு, 3, புலி, வேதாளம், சி3’ என பல படங்களில் நடித்தார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், சில பாடல்கள் பாடியதோடு, கமலின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்திற்கு இசையும் அமைத்தார்.

தற்போது, ஸ்ருதிஹாசன் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘லென்ஸ்’ புகழ் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

‘லென்ஸ்’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘The Mosquito Philosophy’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ருதிஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘Isidro மீடியா’ மூலம் தயாரிக்கவுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்