முகப்புகோலிவுட்

சிபியின் ‘வால்டர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  | February 06, 2020 16:41 IST
Walter

சிபியுடன் இப்படத்தில் 'நட்டி' நடராஜன் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சிபி சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ‘வால்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

யு. அன்பரசன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிக்கும் திரைப்படம் ‘வால்டர்'. சிபி சத்யராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் இப்படம் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் கதையாகும். இப்படத்தை 11:11 ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ஷ்ருதி திலக் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நட்டி நடராஜன் மற்றும் சமுத்திரகனி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஷிரின் கன்ச்வாலா, சனம் ஷெட்டி, பாவா செல்லதுரை, அபிஷேக் வினோத் மற்றும் சார்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார். மேலும், விக்கி இப்படத்தின் சண்டைக் காட்சிகளை இயக்க, தர்ம பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோ லான்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை ஓய்வுபெற்ற முன்னாள் DGP Walter Dawaram IPS வெளியிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. இப்படம் வரும் மார்ச் 6-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்