முகப்புகோலிவுட்

இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடும் பிரபில பின்னணி பாடகர்!

  | July 15, 2019 15:58 IST
Ilaiyaraja

துனுக்குகள்

  • இளையராஜாவின் இசையில் முதல் முறையாக பாடி இருக்கிறார் சித் ஸ்ரீராம்
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு மிஸ்கின் இயக்கி இருக்கும் படம் சைக்கோ
  • மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார் இவர்
தமிழ்சினிமாவில் தனது மெல்லிய குரலில் பல்வேறு பாடல்களை பாடி முன்னணி பாடகராக வளர்ந்திருப்பவர் சித் ஸ்ரீராம். யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், டி இமான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களின் இசை பாடி இருக்கும் இவர் தற்போது இசை ஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார்.
 
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ' திரைப்படத்தின் இறுதிப்பாடலுக்கான பதிவு நிறைவடைந்துள்ளது.
‘கண்ணே கலைமானே' திரைப்படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘சைக்கோ' திரைப்படத்தில் நித்யா மேனன், அதிதி ராவ் ஹிதாரி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், இயக்குநர் ராம் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.
 
பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இளையராஜா இசையில் இறுதிப்பாடல் பதிவு செய்யப்பட்டது. இந்த இறுதி பாடலை  சித் ஸ்ரீராம் பாடி இருக்கிறார். பல்வேறு முன்னணி இசை அமைப்பாளர்களின் இசையில் பாடி வந்த சித் ஸ்ரீராம் முதல் முறையாக இளையராஜாவின் இசையில் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பாடகராக இருக்கும் சித் ஸ்ரீராம் முதல் முறையாக இசை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்