முகப்புகோலிவுட்

டிஸ்னி தயாரிப்பில் தி லயன் கிங் படத்தில் இணைந்த சித்தார்த்!

  | June 26, 2019 14:37 IST
Disney

துனுக்குகள்

  • டிஸ்னி இப்படத்தை தயாரிக்கிறது
  • இப்படத்தில் வரும் குட்டி சிங்கத்திற்கு சித்தார்த் குரல் கொடுக்கிறார்
  • கடந்த 2016 இல் இப்படம் தொடங்கப்பட்டது
கடந்த 2016 ஆம் ஆண்டு ‘தி ஜங்கிள் புக்' திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களை பெற்ற டிஸ்னி, ‘தி லயன் கிங்' படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது.

இந்த படத்தின் லைவ் ஆக்ஷன் பதிப்பை பெரிய திரையில் காண பார்வையாளர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு, ஒரு அருமையான செய்தியை வழங்கியிருக்கிறது டிஸ்னி இந்தியா. வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் திரைப்பட கதாபாத்திரங்களில் ஒன்றான சிம்பாவிற்கு, அதன் தமிழ் பதிப்பில் நடிகர் சித்தார்த் குரல் கொடுக்க இருக்கிறார்.

"லயன் கிங்கை திரையில் மற்றும் மேடையில் நான் முதன்முதலில் பார்த்ததை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. இந்த காலத்தால் அழியாத கிளாசிக் படத்தின் தமிழ் பதிப்பில் சிம்பாவாக நான் பேசுவதும், பாடுவதும் எனக்கு மறக்க முடியாத அனுபவம். சினிமாவில் எனது புதிய அவதாரத்தை எனது பார்வையாளர்களுடன் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றிருக்கிறார்.
 
டிஸ்னியின் தி லயன் கிங் வரும் ஜூலை 19 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்